உத்தரகாண்டில் பஸ் கவிழ்ந்து 32 பேர் பலி!

Filed under: இந்தியா |

பேருந்து ஒன்றில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது உத்தரகாண்ட் பகுதியில் திடீரென கவிழ்ந்ததில் 32 பேர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் லால்தாங் பகுதியிலுள்ள பவுரி மாவட்டத்தில் பிரோன்கால் பகுதியில் திருமண விழா நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்ள வெளியூரிலிருந்து 50க்கும் மேற்பட்டவர்கள் பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளனர். பேருந்து சிம்ரி பகுதியில் மலைப்பாதையில் சென்றுக் கொண்டிருந்தபோது வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் சரிந்து விழுந்தது. பள்ளத்தில் விழுந்த பேருந்தில் இருந்து பயணிகளை மீட்கும் பணியில் அப்பகுதி பொதுமக்கள், போலீசார் மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.