உரிமைத் தொகை திட்டத்திற்கு முகாம்கள் நிறைவு!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெற 1.50 கோடிக்கும் மேலானோர் விண்ணப்பங்களை தந்துள்ளதாகவும், மகளிர் உரிமைத் தொகை திட்ட பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நேற்றுடன் நிறைவடைந்ததாகவும் அறிவித்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக மீண்டும் முகாம் அமைக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 2 கட்டங்களாக நடந்த முகாமில் ஏறத்தாழ 1 கோடியே 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் பெறப்பட்ட நிலையில் விடுபட்டவர்களுக்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டது. ஏற்கனவே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்ப தலைவிகள் தகுதி வாய்ந்த மகளிர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிறப்பு முகாம் மூலம் ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.