உலகநாயகன் படத்தின் முதல் சிங்கில் ரிலீஸ்

Filed under: சினிமா |

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் “விக்ரம்”. தற்போது திரைப்படத்தின் முதல் சிங்கில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படம் வரும் ஜுன் மாதம் 3ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. படத்தின் பாடல்கள் மற்றும் டிரெயிலர் ஆகியவை ஒரே நாளில் மே 15ம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நிகழ்வு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பே, மே 11ம் தேதி இன்று இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘பத்தல பத்தல’ என்ற பாடல் வெளியாக உள்ளதாக கூறப்பட்டது. அதன்படி, அனிருத் இசையில், கமலே எழுதி பாடியுள்ள “பத்தல பத்தல” என்ற பாடல் சோனி மியூசில் சவுத் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. இது வெறும் 20 நிமிடத்தில் 5 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.