டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீரர் சுமித் அண்டில். டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பலரும் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் இந்தியா 1 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களுடன் 34ம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் 68.55 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து உலக சாதனை படைத்துள்ளதுடன் தங்க பதக்கத்தையும் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக 2019 துபாய் பாராலிம்பிக்ஸில் 62.88 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இவர் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.