ஐ.பி.எல் போட்டியில் 100 கேட்ச்களை பிடித்து டோனி சாதனை – குஷியில் ரசிகர்கள்!

Filed under: விளையாட்டு |

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொரோனா வைரஸ் காரணத்தினால் இந்தியாவில் நடைபெறாமல் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் டோனி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் கீப்பராக 100 கேட்ச்களை பிடித்து டோனி சாதனை படைத்துள்ளார்.

பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் அடித்த பந்து பின்னால் இருந்த டோனியின் சென்ற போது அதை பிடித்தார். இதற்கு முன்பு தோனி 99 கேட்ச்களை பிடித்து வைத்திருந்த டோனி கே.எல் ராகுலின் கேட்ச் மூலம் 100 ஆக மாறி புதிய சாதனை படைத்தது.

மேலும் நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அரியானா போட்டியில் சென்னை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டோனியின் சாதனையைக் கண்டு ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.