ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கேப்டன் தோனி!

Filed under: விளையாட்டு |

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற குவாலிபையர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் முடிந்துள்ளன. இரண்டு போட்டிகளிலும் முதல் பேட்டிங் செய்த அணிதான் வென்றுள்ளது. மைதான ஊழியர்கள் 20 பேரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சர்ப்ரைஸாக சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பாக ஊழியர்கள் அனைவருக்கும் அவர் பரிசுப் பொருட்களை வழங்கி கௌரவித்துள்ளார். மேலும் ஊழியர்களுக்கு அனைவருக்கும் அவர் தனித்தனியாக ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்துள்ளார்.