எத்தனாலில் இயங்கும் கார்!

Filed under: அரசியல்,இந்தியா |

கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் கார்களுக்கு மாற்றாக 100% எத்தனாலில் இயங்கும் கார் குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது. இன்று முதல் மத்திய அமைச்சர் இந்த காரை அறிமுகம் செய்து வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இன்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பெட்ரோல் டீசல் இல்லாமல் 100% எத்தனாலில் இயங்கும் டொயோட்டா இன்னோவா காரை அறிமுகப்படுத்தவுள்ளார். சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அதிக புகையை கக்கும் வாகனங்களை மத்திய அரசு படிப்படியாக கட்டுப்படுத்தி வரும் நிலையில் எதிர்காலத்தில் இந்த கார் அதிகளவில் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஹைட்ரஜனில் இயங்கும் காரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது எத்தனால் காரை அறிமுகப்படுத்த உள்ளார்.