சீனா நாட்டின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டங்கள் அதிகரிப்பு!

Filed under: இந்தியா |

இந்தியா-சீனா இடையே எற்பட்ட தாக்குதலில் 20 இந்தியா ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். இரண்டு நாடுகள் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் சீனா நாட்டின் பொருட்களை தவிர்க்க வேண்டும் என போராட்டங்கள் அதிகரித்து வருகிறது.

தற்போது டெல்லியில் வர்த்தக கூட்டத்தில் வீடியோ கான்பிரின்ஸ் மூலம் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி: சீனா நாடு மீது அனைத்து உலக நாடுகளும் பெரும் விரோத்தில் உள்ளது.

சீனா நாடு உடன் வர்த்தகம் செய்வதற்கு உலக நாடுகள் விரும்பவில்லை எனவும் உலக நாடுகள் இந்தியா உடன் தான் வர்த்தகம் செய்வதற்கு விரும்புகிறது என நிதின் கட்கரி கூறியுள்ளார். இந்த சமயத்தில் நாம் நாடு உற்பத்தியை அதிகரிக்கவும் மற்றும் இறக்குமதியை குறைக்கவும் நிதின் கட்கரி கேட்டுக்கொண்டு உள்ளார்.