எனது பிறந்த நாள் பரிசு ‘வீர் பாப்பா’!

Filed under: சினிமா |

சௌந்தர்யா ரஜினிகாந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் கடவுள் கொடுத்த பரிசுதான் “வீர் பாப்பா” என்ற தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகள் சௌந்தர்யா தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடியதை ரஜினிகாந்த் நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என கூறிய சௌந்தர்யா ரஜினிகாந்த் கடவுள் தனக்கு இந்த பிறந்தநாளின்போது அளித்த பரிசுதான் வீர் பாப்பா என்று கூறினார். மேலும் கடவுளின் குழந்தையான தனது தந்தை ரஜினிகாந்த் அவர்களின் வாழ்த்து தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது என்று அவர் கூறியுள்ளார்.