என்னது நான் சங்கியா…? கமல் ஆவேசம்

Filed under: Uncategory,அரசியல்,தமிழகம் |

அறத்தின் பக்கம் நிற்கும் தன்னை பார்த்து சங்கி, பி டீம் என்று விமர்சிப்பவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது தான் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

முறைகேடு புகாரில் சிக்கியுள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவுக்கு ஆதரவாக டுவிட்டரில் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதையடுத்து பாஜகவுக்கு ஆதரவாக அவர் செயல்படுவதாக சமூகவளைதளங்களில் அதிமுகவினரும், திமுகவினரும் கமலஹாசன் மீது கடுமையான விமர்சனங்கள் வைத்து வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கமல் வெளியிட்டுள்ள பதிவில், திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பியவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை என்று கூறியுள்ளார்.