‘எம்’என்ற எழுத்தில் தொடங்கினாள் சர்வாதிகாரியா? :ராகுலுக்கு ட்ரெண்டிங்கில் பதிலடி

Filed under: அரசியல்,இந்தியா |

புதுடில்லி : ”உலகில் பல சர்வாதிகாரிகளின் பெயர்கள் பெரும்பாலும் ‘எம்’ என்ற எழுத்தில் தான் தொடங்குகிறது” என ராகுல் டுவீட் செய்ததற்கு பலரும் அவருக்கு பதில் கொடுத்து வருவதால் டுவிட்டரில் இந்த விவகாரம் டிரெண்ட் ஆனது. விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து 60 நாட்களை கடந்து டில்லியில் நடந்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல். விவசாயிகள் கூட்டம் கூடுவதை தடுக்க டில்லி எல்லையில் தற்காலிக தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுல், ‘சுவர் எழுப்புவதை விடுத்து பாலங்களை கட்டுங்கள்” என பதிவிட்டார்.

இந்நிலையில் டுவிட்டரில் ”ஏன், சர்வாதிகாரிகளின் பெயர்கள் பெரும்பாலும் ‘எம்’ என்ற எழுத்தில் தொடங்குகிறது என பதிவிட்டு, ”மார்கோஸ், முசோலினி, முபாரக், முஷாரப், மைக்கோம்பெரோ, மிலோசெவிக், மொபட்டு” என உலகின் சில சர்வாதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டார் ராகுல். இந்த பதிவு பிரதமர் மோடியை மறைமுகமாக குறிப்பிடுவதாக இருந்தது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் அவருக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர். ”என்ன ஒரு கண்டுபிடிப்பு.

அப்படியானால் மகாத்மா காந்தி, மோதிலால் நேரு, மன்மோகன் சிங், மம்தா பானர்ஜி, மைனோ (சோனியா குடும்பம்) இவர்களும் இந்த பட்டியலில் வருகிறார்களா ராகுல்”. ”இந்த பட்டியல் இதோடு முடியவில்லை எம்எம்சிங், முலாயம் சிங் என பட்டியல் நீள்கிறது. இவர்களையும் இந்த பட்டியலில் இணைத்து கொள்ளுங்கள்”. ”நீங்கள் இப்படி பேசிக் கொண்டே இருங்கள், நிச்சயம் உங்களால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாது”. சிலர், ”மன்மோகன் சிங்கை சர்வாதிகாரி பட்டியலில் சேர்க்க, அவர் சர்வாதிகாரி எல்லாம் கிடையாது ரோபாட்” என பதில் கொடுத்தனர். ”மோதிலால் நேரு, மன்மோகன் சிங், மம்தா ஆகியோரையும் ராகுல் எப்படி சர்வாதிகாரி பட்டியலில் இணைத்தார் என ஆச்சர்யமாக உள்ளது” என ஒருவர் கருத்து பதிவிட்டார். இப்படி பலரும் காங்கிரஸ் மற்றும் அவர்கள் தான் பல அரசியல் தலைவர்களையும் இந்த பட்டியலில் இணைத்து சமூகவலைதளமான டுவிட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #Dictator, #MohandasKaramchandGandhi, #MotilalNehru, #ManmohanSingh, #Maino ஆகிய ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின.