எம்.பி. வீடியோ காலில் நிர்வாண கோலம்!

Filed under: இந்தியா |

ஒய்எஸ்ஆர்சிபிச் சேர்ந்த எம்.பி. ஒருவரின் வீடியோ வைரலாகியுள்ளது. ஆனால் அந்த வீடியோ தனக்கு தொடர்பானது அல்ல, போலியானது என்று அவர் கூறியுள்ளார்.

கோரண்ட்லா மாதவ் இந்துப்பூர் பகுதியின் ஒய்எஸ்ஆர்சிபி எம்.பி.யாக உள்ளார். இவர் ஒரு பெண்ணுடன் நிர்வாணமாக வீடியோ காலில் பேசியது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோ போலியானது என்று எம்பி கோரண்ட்லா மாதவ் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “தனக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். இச்செயல் எனக்கு வேதனையை அளிக்கிறது. தெலுங்கு தேசம் கட்சியின் சிந்தகயல் விஜய் மற்றும் பொன்னுரு வம்சி ஆகியோர் வீடியோவை பரப்பியுள்ளார்கள். அவர்கள் என்னை நேரடியாக எதிர்கொள்ள வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக எந்த விசாரணைக்கும் தான் தயார். நான் ஜிம்மில் இருந்தபோது வீடியோ எடுத்து மார்பிங் செய்திருக்கிறார்கள்” என்றார்.