எல்பின் நிர்வாகிகள் மீது குண்டர் சட்டம் பாயுமா ?

Filed under: சென்னை,தமிழகம் |

திருச்சி, ஜூலை 8

எல்பின் நிர்வாகிகள் மீது குண்டர் சட்டம் பாயுமா? அறம் மக்கள் நல சங்கம் இயக்கம் தலைவர் ராஜா இவர் திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் வர்த்தக பிரிவு மாநில துணைச்செயலாளர் ரமேஷ் குமார் இருவரும் இணைந்து, முதல் முதலாக எல்பின் என்று பெயரிலும் இப்போது அறம் மக்கள் நலச் சங்கம் என்றும் கூறி ரியல் எஸ்டேட், எம்.எல்.எம், பணம் இரட்டிப்பு, மளிகை பொருட்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் வரை நாமே வாங்கி விற்று லாபம் அடையலாம். அனைவரும் வெளிநாடு சுற்றுலா, கார், பங்களா செல்வச் செழிப்போடு வாழலாம் என்று ஆசைவார்த்தை கூறி அப்பாவி மக்களிடம் கோடிக்கணக்கில் கொள்ளை அடித்து வருகிறார்கள்.

தொடக்கத்தில் தங்கள் 420 வேலைக்கு பாதுகாப்பாக விடுதலை சிறுத்தை கட்சியை பயன்படுத்தி வந்தனர். அதன் பிறகு பணம் பெருமளவு குவிய ஆளும்கட்சி அதிமுக விடம் நெருக்கம் காட்டி சில அமைச்சர்கள் மூலம் தூது விட்டு இணைய பல்வேறு முயற்சிகள் மூலம் முதல்வர் கொரோனா நிதிக்கு நிவாரணம், அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த அமைச்சர்கள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, ஆயில், பருப்பு மளிகை போன்ற நிவாரண பொருட்கள் வழங்க பிரமாண்டமாக மேடையமைத்து அழைப்பிதழ் அடித்து நூல் விட்டு பார்த்தார்கள் ஆனால் உளவுத்துறை இவர்களின் மோசடி குறித்து புட்டு புட்டு வைத்தது விரைவில் கம்பி என்ன வேண்டிய குற்றவாளிகள் என்று ரிப்போர்ட் கூறியதை அடுத்து அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் இவர்களிடமிருந்து சாதுரியமாக எஸ்கேப் ஆகி விட்டார்கள்.

இவர்களை சொந்தமாக பத்திரிகை, வெப் டிவி, மாணவரணி இளைஞரணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி என பல அணிகள் அமைத்து எம்.எல்.எம்., மார்க்கெட்டிங் லீடர்களுக்கு பொறுப்பு கொடுத்து மாவட்டம்தோறும் வசூல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. இது எல்லாம் புதிதாக பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் முருகனுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. இவர்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துள்ளார். புதிதாக சேர்ந்துள்ள மோசடி மன்னன் ராஜா தன்னிடம் பதிமூன்று லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாகவும் அனைவரும் விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் இணைவார்கள் என்று வாய்கூசாமல் பேட்டி கொடுத்துள்ளார்.

இவர்கள் அனைவரும் விரைவில் குற்றவாளியாக பிடிபடும்போது அது பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரிய கெட்ட பெயராகும் அமையும் என்பது உண்மை. இப்பொழுது நெருக்கடி காலத்தில் அரசு ஒரு மாவட்டத்திற்கு விட்டு மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல கடுமையாக நிபந்தனை விதித்துள்ளது. குறிப்பாக மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம் இதற்கு மட்டும் சென்னைக்கு வர, சென்னையிலிருந்து வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. காரணம் சென்னையில் இதுவரை கொரோனாவால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் இந்த மாவட்டத்தை சிகப்பு பட்டியலில் சேர்த்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால் திருச்சியில் இருந்து தனது 20 க்கு மேற்பட்ட எடுபிடிகளுடன் அறம் மக்கள் இயக்க தலைவர் ராஜா எப்படி சென்னை சென்றார். இவர்கள் முறையான இ பாஸ் வாங்கினார்களா ? இவர்கள் கூறிய காரணங்கள் உண்மையானவையா? அரசை ஏமாற்றி விட்டு பொய்யான காரணம் காட்டி சென்றார்களா? என்று காவல்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவர்களால் ஏமாந்த அப்பாவி மக்களின் வேண்டுகோள் ஆகும்.

ஆணையர் லோகநாதன் IPS

இந்த நிலையில் தான் இந்த கும்பல் மீது நேற்று திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் முதன் முதலாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, ஏற்கனவே அவர்கள் மீது மதுரை மற்றும் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு, மற்றும் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் ராஜா மற்றும் ரமேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் பணத்தை முறைகேடு செய்ததாக எல்பின் ரமேஷ், ராஜா, அருள்மணி உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது சம்பந்தமாக நாம் விசாரணையில் இறங்கிய போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு எல்ஃபின் குழுவினர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள அம்பு ராணி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரிடம் இருந்து 45 லட்ச ரூபாயை முறைகேடாக வாங்கிக் கொண்டதாக அவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் புகார் அளித்து இருந்தார். அதன் பேரில் அதனைப்பற்றி சமரசம் செய்வோம் என்று திருச்சிக்கு அழைத்து அவரை அடியாட்களை வைத்து அடித்ததாக பாதிக்கப்பட்ட ராஜ்குமார் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது, இதுவரை அவரது சங்கத்தினர் மீது மட்டுமே வழக்கு இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது ஒட்டுமொத்த எல்ஃபின் நிர்வாகத்தையும் கதிகலங்க வைத்துள்ளது.

இந்நிலையில் காவல்துறை அவர்களை கைது செய்ய திட்டம் தீட்டி வருவதாகவும் அவர்கள் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே இந்த கும்பல் தஞ்சை மாவட்டதில் வழக்குகள் உள்ளன அவர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்த அப்பொழுது டி.ஐ.ஜி யாக இருந்த லோகநாதன் தான் இப்போது திருச்சி மாநகர கமிஷ்னராக உள்ளார். பல வழக்குகள் பல மாவட்டத்தில் இவர்கள் மீது உள்ள நிலையில் ஏன் இன்னும் குண்டர் சட்டம் பாய்ச்சவில்லை என்கிறார்கள்.

புதிய கமிஷ்னர் லோகநாதன் இந்த மோசடி மன்னர்கள் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!