ஐபிஎல் தொடர்: கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப்

Filed under: விளையாட்டு |

துபாய், அக் 2:
ஐபிஎல் தொடரில்,  பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த போட்டியில், பஞ்சாப் அணி வெற்றிபெற்றுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 45வது போட்டி நேற்று நடந்தது. இதில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. வெங்கடேச ஐயர் 67 ரன்களும் திரிபாதி 34 ரன்களும் எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, 166 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி, 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்த வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணி தற்போது புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இந்த வெற்றியின் மூலம், பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப் அணி தகுதிபெறும் வாய்ப்பை பெற்றுள்ளது.