ஐ.பி.எல். தொடர்: ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுமா கொல்கத்தா அணி?

Filed under: விளையாட்டு |

துபாய், அக் 4:
ஐ.பி.எல். தொடரில் நேற்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு, ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 48வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. பின்னர் 165 ரன்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் பெங்களூர் அணி, 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

இதைத்தொடர்ந்து நடந்த 49வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களை மட்டுமே சேர்த்தது.

பின், 116 ரன்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

புள்ளி பட்டியலில், 4வது இடத்திற்கு முன்னேறி உள்ள கொல்கத்தா அணிக்கு, இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.