டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிவிச் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்!

Filed under: விளையாட்டு |

டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிவிச் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளார்.

டென்னிஸ் விளையாட்டின் சிறந்த வீரர் நோவக் ஜோகோவிக் தான். இவர் உலக அளவில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். நோவிக் செர்பியா நாட்டை சேர்ந்தவர். நோவிக் உலக அளவில் பல போட்டிகளை விளையாடி வெற்றி பெற்று பல சாதனைகளை படைத்துள்ளார்.

நோவக் ஜோகோவிச் அண்மையில் டென்னிஸ் தொடரை நடத்தியுள்ளார். அப்போது ரசிகர்கள் சமூக இடைவெளி பின்பற்றாமல் இருந்தனர் என புகார் வந்தது.

இதனை தொடர்ந்து ஜோகோவிச் மற்றும் அவருடைய மனைவி ஜெனிலாக்கும் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இருவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தினர்.

தற்போது மீண்டும் இவர்களுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று(நெகடிவ்) இல்லை என வந்துள்ளது. நோவக் ஜோகோவிச் மீடியா வெளியிட்ட அறிக்கையில்: இவர்கள் இருவருக்கும் செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ‘நெகட்டிவ்’ வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.