ஒடிசாவில் ஆசிரியர் கைது!

Filed under: இந்தியா |

ஒடிசாவில் ஆசிரியர் மாணவர்களை அடித்ததால் 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாவட்டத்திலுள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை கணித ஆசிரியர் சரமாரியாக அடித்துள்ளார். இதில் 14 மாணவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் நான்கு மாணவர்களுக்கு காயம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதுபற்றி பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்யதுள்ளனர். மேலும் அந்த ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்படுவதாகவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.