ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Filed under: இந்தியா |

மூத்த குடிமக்களின் நலனில் அக்கறை கொண்டு இந்தியாவிலுள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் நல்ல அறிவிப்புகளை வழங்கி வருகிறது.

ஓய்வூதியம் பெறும் பென்சனர்கள் தங்களது ஆயுள் சான்றிதழை வருடா வருடம் கொடுத்துதான் பென்சன் தொகையை பெற வேண்டியிருக்கும். மிக எளிதாக அஞ்சலகத்திலேயே பெற்றுக் கொள்ளும் வகையில் தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மூலம், ஓய்வூதியம் பெறும் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு முறை வாழ் நாள் சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.
இந்த ஆயுள் சான்றிதழ் வருடம் தோறும் நவம்பர் மாதத்திற்குள் சமர்பிக்கப்பட வேண்டும். இந்த ஆயுள் சான்றிதழ் ஒரு ஓய்வூதியதாரர் உயிருடன் தான் இருக்கிறார் என்பதற்கான ஆதாரமாக உள்ளது. ஒரு வேளை சரியான சமயத்தில் ஆயுள் சான்றிதழை ஓய்வூதியதாரர் சமர்பிக்காவிட்டால், ஓய்வூதியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். நீங்கள் வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆயுள் சான்றிதழை வழங்கலாம். இந்த சான்றிதழ் வழங்கப்பட்ட ஒரு வருடத்திற்கு செல்லும் என அறிவித்துள்ளது. அது முடிவடைவதற்குள் அடுத்த ஆண்டிற்கான சான்றிதழை வாங்கிக் கொள்ளலாம். இந்த ஆயுள் சான்றிதழை பிபிஓ நம்பர், ஆதார் கார்டு, வங்கி கணக்கு என் மற்றும் ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் உள்ளிட்டவற்றை கொடுக்க வேண்டியிருக்கும். இதனை தற்போது அஞ்சலகங்கள், வங்கிகள், பொது சேவை மையங்கள், இபி எஃப் ஓ அலுவலகம், உமாங்க் ஆப் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.