கங்கனா ரணாவத்துக்கு டெங்கு காய்ச்சல்!

Filed under: சினிமா |

பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத்துக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“தலைவி” என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தவர் கங்கனா ரனாவத் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். மேலும் அவரது டுவிட்டுக்கள் சில சர்ச்சைக்குரியதாகவும் இருக்கும். அதற்கு கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் இருக்கும். தற்போது நடிகை கங்கனா ரணாவத்துக்கு திடீரென டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.