கடலுக்கடியில் 1 லட்சம் டன் எமன்!

Filed under: உலகம் |

சுமார் 1 லட்சம் டன் எடையுள்ள ரசாயன வெடிகுண்டுகள் பால்டிக் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1942 வாக்கில் நடைபெற்ற இரண்டாம் உலக போரில் ஹிட்லரின் ஜெர்மனியை எதிர்த்து நேச நாடுகள் கடுமையாக போர் தொடர்ந்தன. பதிலுக்கு ஜெர்மனியும் புதிய புதிய ஆயுதங்களை கண்டுபிடித்து உலக நாடுகளை திக்குமுக்காட செய்து வந்தது. 1945ல் இரண்டாம் உலகப்போர் ஜெர்மனியின் வீழ்ச்சியோடு முடிவுக்கு வந்தது. அப்போது நாஜிக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்கள், கன்னிவெடிகள், வெடிமருந்துகள் என சுமார் 1 லட்சம் டன் வெடிப்பொருட்களை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சோவியத் யூனியன் உள்ளிடக்கிய ஆணையம் பால்டிக் கடலில் போட்டு புதைத்தது. தற்போது கடல் அரிப்பால் கடலுக்குள் உள்ள ரசாயன வெடிப்பொருட்கள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற நிலையை அடைந்து வருவதாக போலந்து நாட்டு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த ரசாயன குண்டுகள் வெடிக்கும் பட்சத்தில் கடல் உயிரினங்கள் பல உயிரிழப்பதுடன், கடலும் நஞ்சாகும் வாய்ப்பு உள்ளது. இது சுற்றுசூழலில் மிகப்பெரும் சீர்கேட்டை உலக அளவில் ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.