“கடைசி விவசாயி”திரைபடத்திற்கு அங்கீகாரம்!

Filed under: சினிமா |

“கடைசி விவசாயி” திரைப்படத்திற்கு உலகளவில் இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.

LetterBoxd எனும் தளம் உலகளவில் திரைப்படங்களை வரிசைப்படுத்தி அதன் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் “கடைசி விவசாயி” திரைப்படம் முன்னணி வரிசையில் உள்ளது. இயக்குனர் மணிகண்டன் “ஆண்டவன் கட்டளை” படத்திற்குப் பிறகு 3 ஆண்டுகள் இடைவெளியில் “கடைசி விவசாயி” படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு இருவரும் கவ-ரவ வேடத்தில் நடித்திருந்தனர். முக்கியமான கதாபாத்திரத்தில் முருகேசன் என்ற வயதான தாத்தா நடித்திருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அதன் பின்னர் ஓடிடியிலும் வெளியாகி பரவலானக் கவனத்தைப் பெற்றது. 2022ம் ஆண்டு முதல் 6 மாதங்களில் வெளியான உலக திரைப்படங்களின் சிறந்தவைப் பட்டியலில் “கடைசி விவசாயி” திரைப்படம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இப்பட்டியலில் RRR 6ம் இடத்தையும், விக்ரம் 10ம் இடத்தையும் பிடித்துள்ளது.