கருணாநிதிக்கு கவிதை எழுதிய வைரமுத்து!

Filed under: சென்னை |

சென்னை அண்ணா சாலையில் முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களுக்கு சிலை வைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

 

இதனால் தமிழக முதமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து கவியரசு வைரமுத்து தனது டுவிட்டரில் கவிதை எழுதியுள்ளார். அந்த கவிதையில்
தமிழ்நாட்டு
அரசியல் நெடுங்கணக்கில்
முன்னெப்போதுமில்லாத
முதல் நிகழ்வு
முதலமைச்சராகத்
தலையெடுத்த தனயன்
முதலமைச்சராகிய
தந்தைக்குச் சிலையெடுப்பது
எட்டிய தரவுகள் வரை
இந்தியாவிலும்
இதுவே முதல் என்று தோன்றுகிறது
முன்னவர் பின்னவர்
இருவரையும் போற்றுகிறேன் & என்று கூறியுள்ளார்.