கருமுட்டை விற்பனை! 3 பேர் கைது!

Filed under: தமிழகம் |

பெண் வன்கொடுமைக்கு உள்ளாவதற்கும், கருமுட்டைகள் விற்பதற்கும் பெற்ற தாயே உடந்தையாக இருந்த சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது.

கணவனை பிரிந்து தனியான வாழ்ந்துள்ள பெண் ஒருவருக்கு 16 வயதில் மகள் இருந்துள்ளார். அப்பெண்ணுக்கு வேறோரு ஆணுடன் பழக்கமிருந்துள்ளது. ஆண் நண்பருடன் உல்லாசமாக இருக்க தன்னுடைய கருமுட்டைகளை மருத்துவமனையில் விற்று வரும் பணம் சம்பாதித்துள்ளார். இவரோடு மட்டுமில்லாமல் அவரது 16 வயது மகளின் கருமுட்டைகளையும் மருத்துவமனையில் விற்க தொடங்கியுள்ளார். சிறுமிக்கு 20 வயது என போலியாக ஆதார் கார்டை தயார் செய்துள்ளார்.

மேலும் அப்பெண்ணின் காதலன் அடிக்கடி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் 12 வயது முதலே இக்கொடுமை தொடர்ந்துள்ளது. இந்நிலையில் அவர்களிடமிருந்து எப்படியோ தப்பித்த சிறுமி சூரம்பட்டியில் தன்னுடைய சொந்தக்காரர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார். அங்கு சிறுமிக்கு நேர்ந்த கொடுமைகள் தெரியவர அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியின் தாய், தாயின் காதலன் மற்றும் கருமுட்டை விற்க ஏஜெண்டாக செயல்பட்ட பெண் என 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அந்த ஏஜெண்ட் பெண்ணிடம் இதுபோன்று மேலும் பல சிறுமிகளின் கருமுட்டைகள் சட்டத்திற்கு புறம்பாக பெறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.