கறி விருந்தில் அரசு ஊழியர்கள் : குப்பைக் கூடைக்கு சென்ற 144 தடை உத்தரவு !

Filed under: புதுச்சேரி |

புதுச்சேரி,  ஏப்ரல், 25  

வே. மாரீஸ்வரன்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எப்படியாவது புதுச்சேரி மக்களை காப்பாற்றி விட வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இரவு பகல் என்று பாராமல் அரசு சுகாதாரத்துறை நிர்வாகத்தை முடுக்கிவிட்டு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தி கொண்டு வரும் இந்த நேரத்தில், புதுச்சேரி அரசு வனத்துறை ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்று நோய் பற்றி எந்தவித கவலைப்படாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஊரடங்கு உத்தரவை  குப்பைக் கூடைக்குள் கடாசிவிட்டு கறி விருந்து உணவு சாப்பிட்ட விவகாரம் தற்போது புதுச்சேரி அரசு ஊழியர்களிடம் சலசலப்பை உருவாகியுள்ளது.

சரி, விசயத்திற்கு செல்வோம்…
புதுச்சேரி அரசில் வனத்துறையில் ஓட்டுனராக வேலை செய்யும் கல்யாண சுந்தரமும், கால்நடை மருத்துவமனை உதவியாளரான கிருஷ்ணராஜ் ஆகிய இருவரும் அயல் பணியில் ( deputation ) அதாவது புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை அமைச்சரின் உதவியாளராக தற்போது பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 23/4/2020 அன்று மதியம் சுமார் ஒரு மணி அளவில் வில்லியனூர் காவல் எல்லைக்குட்பட்ட மணவெளி திருக்காஞ்சி சாலையில் அரசின் 144 தடை உத்திரவை மதிக்காமல் ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமல் பதினைந்துக்கும் மேற்பட்ட தனது நண்பர்களை ஸ்பாட்டுக்கு வரவழைத்து ஒரே இடத்தில் கூடி சமூக இடைவெளியை பின்பற்றாமல் உற்சாக பானத்தை ஏற்றிக்கொண்டு ஆடலும் பாடலும் ஆக கறிவிருந்து சாப்பிட்டுள்ளனர்.
 

இந்த கறிவிருந்து விவகாரம் வில்லியனூர் காவல் துறையினருக்கு அரசல்புரசலாக தெரிந்திருந்தும் வாய் பேசாத ஊமைகளாக நடந்து கொண்டார்களாம்.
இந்த படத்தில் உள்ளவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மேற்படி தகவலை நம்மிடத்தில் கூறி செய்தி வாசிக்கிறார்கள் புதுச்சேரி அரசு துறையில் நேர்மையாக பணிபுரியும் சில ஊழியர்கள்.
 
முதல்வர் நாராயணசாமி மேற்படி சம்பவத்தை ரகசிய விசாரணைக்கு உட்படுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா.?