கல்வித்துறை ஆய்வில் அதிர்ச்சி!

Filed under: சென்னை,தமிழகம் |

கல்வித்துறை நடத்திய ஆய்வில் கொரோனா நொய் தொற்று காலத்தில் 511 மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளதாக அளித்துள்ள தகவல் அதிர்ச்சியளித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு நீடித்து வருகிறது. கொரோனா காரணமாக 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கடும் ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த சமயம் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளும் முழுவதுமாக மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் இடைநிற்றலை தவிர்க்க மாணவர், மாணவிகளை தேடி சென்று பள்ளி கல்வியை தொடர்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாடு கல்வித்துறை நடத்திய ஆய்வில் கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த சமயத்தில் 511 மாணவிகளுக்கு திருமணம் நடந்துள்ளதாம். அந்த மாணவிகளை கண்டறிந்து அவர்களது படிப்பு தொடர தேவையான நடவடிக்கைகளை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளது.