கள்ள சாராயம் விற்ற 3 பேர் கைது!

Filed under: தமிழகம் |

வேலூர்,ஏப்ரல் 28
கென்னடி

வேலூர் மாவட்டம், காட்பாடியில் கள்ள சாராயம் விற்ற 3 பேர் கைது, 90 லிட்டர் சாராயம் அழிப்பு.

காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் உள்ள அம்பேத்கர் தெருவில் கள்ளசாராயம் விற்பதாக விருதம்பட்டு காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலையடுத்து அம்பேத்கர் தெருவில் உள்ள பொதுக் கழிவறையின் பின்புறம் மறைத்து வைத்திருந்த சுமார் 60 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்தனர்.கள்ளச்சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த பல்லு (எ) ஜெய மணிகண்டன் (32), காளியப்பன் (28) ஆகிய இருவரை கைது செய்தனர். அதேபோல் காட்பாடி அறுப்புமேடு பகுதியில் கள்ளச்சாராயம் பெற்ற சர்தார் (41) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 30 லிட்டர் சாராயம் பறிமுதல்.இரு சம்பவத்திலும் பறிமுதல் செய்த 90 லிட்டர் கள்ளச்சாராயத்தை விருதம்பட்டு காவல்துறையினர் அழித்தனர், கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விருதம்பட்டு போலீசார் வேல்லூர் மத்திய சிறையில் அடைத்தனர்.