கவுன்சிலரின் கணவரின் அரிவாளுடன் நடத்திய அட்ராசிட்டி!

Filed under: தமிழகம் |

திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை அரிவாளை எடுத்துக் கொண்டு துரத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் மண்னச்ச நல்லூர் அருகே தளுதாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலரான நித்யாவின் கணவர் வெற்றிச் செல்வன். அப்பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இக்கடனை திருப்பிக் கொடுக்காமல் பல ஆண்டுகள் குணசேகரனை அலைக்கழித்து வந்துள்ளார். நேற்றும் வெற்றிச்செல்வனிடம் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட சென்றுள்ளார் குணசேகரன். அப்போது, மதுபோதையில் இருந்த வெற்றிச்செல்வன், குணசேகரனை அரிவாளை எடுத்து வெட்ட முயன்றார். இதைத்தடுக்க முயன்றவர்களையும் அவர் வெட்ட முயன்றார். இச்சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெற்றிச் செல்வனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.