கார்த்திக் சுப்பராஜ் நானியை இயக்குகிறாரா?

Filed under: சினிமா |

நடிகர் நானி “தசரா” திரைப்படத்தின் வெற்றியை அடுத்து “ஹாய் நானா” என்ற திரைப்படம் டிசம்பர் 7ம் தேதி ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்துக்கு பிறகு பேன் இந்தியா திரைப்படமான “சூர்யாவின் சனிக்கிழமை” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விவேக் ஆத்ரேயா இயக்குகிறார்.

நடிகர் நானி தமிழ் சினிமாவிலும் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் டான் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அந்த படத்துக்கு பதிலாக அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தை நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இதற்காக கார்த்திக் சுப்பராஜை சந்தித்து அவர் சொன்ன கதையைக் கேட்டு ஓகே சொல்லியுள்ளதாக தெரிகிறது. கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் இயக்கிய “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.