தனியார் பேருந்து மற்றும் கார் திருப்பூர் அருகே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள கொடுவாய் அருகேயுள்ள காக்கா பள்ளத்திலிருந்து திருப்பூர் நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, அதே சாலையில் எதிர்ப்புறம் ஒரு தனியார் பேருந்து வந்துகொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் 2 பேர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related posts:
போதுமான பயணிகள் இல்லை மூடப்படும் ரயில் நிலையம்!
துவாக்குடி பகுதியில் 2-வது சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும். அதிமுக ஆர்ப்பாட்டத்தில் புறநகர் மாவட்டச் ...
திருச்சியில் இன்று நடந்தது: காங்கிரஸ் எஸ்.சி, எஸ்.டி பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம். திரளான நிர்வாகிகள...
அடுக்கு மாடி குடியிருப்பிற்கு மின் கட்டண குறைவு?