ஆப்கானிஸ்தானில் இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து – 15 பேர் உயிரிழப்பு!

Filed under: உலகம் |

ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர்கள் பயற்சியை மேற்கொண்ட போது ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தின் தெற்கில் இருக்கும் நாவா மாவட்டத்தில் அந்நாட்டின் விமானப்படை வீரர்கள் நேற்று இரவு ஹெலிகாப்டர்களில் பயிற்சியை மேற்கொண்டனர்.

அந்த சமயத்தில் இரு ஹெலிகாப்டர்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அறிந்த மீட்புக்குழு வேலையை மேற்கொண்டனர். அந்த விபத்தில் 15 விமானப்படை வீரர்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.