காலையில் அமமுக மாலை அதிமுக!

Filed under: அரசியல்,தமிழகம் |

இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் ஒரே பேரூராட்சி தலைவர் மா.சேகர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அவர் அதிமுகவில் இணைந்துள்ளளார்.

இன்ற காலை அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் சேகர் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்திருந்தார். அவருடன் கட்சியினர் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார். அமமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மா.சேகர் சற்றுமுன் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதேபோல் ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆசைத்தம்பி, வடக்கு ஒன்றிய செயலாளர் சிவ ராஜேஷ் கண்ணன் ஆகியோர்களும் அதிமுகவில் இணைந்துள்ளனர்.