காளி பூஜையை தொடங்கி வைத்ததால் வந்த எதிர்ப்பு.. மன்னிப்பு கோரினார் சாகிப் அல் ஹசன்

இந்து மத சம்மத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹாசன் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த நிலையில்,இரண்டு நாட்களுக்கு முன்பு காளி பூஜையை துவக்கிவைக்க ஷகிப் அல் ஹாசன் கொல்கத்தா சென்றுள்ளார். மேலும், காளி சிலையின் முன்பு வழிபடுவது போன்ற புகைப்படங்களும் வெளியானதால் இஸ்லாமியர்கள் கொள்கைக்கு எதிராகவும் அவர்களது மனதை ஷகிப் புண்படுத்திவிட்டார் என்று சர்ச்சை எழுந்தது.

இதற்கிடையே, இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஷகிப் அல் ஹசன், வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்தார். அதில் 40 முதல் 45 நிமிடங்கள் வரை வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேனே தவிர காளி பூஜையை நான் துவக்க போகவில்லை.ஆனால், நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறும்போது காளி பூஜையில் மெழுகுவர்த்திகளை மட்டுமே ஏற்றி வைக்குமாறு சிலர் கேட்டுக்கொண்டதால் எனது செயலுக்கு நான் வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று சாகிப் தெரிவித்தார்.