குறை தீர்ப்பு முகாம்!

Filed under: தமிழகம் |

இன்று முதல் ரேஷன் கடைகளில் குறை தீர்ப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் தமிழகத்தில் மாவட்டம் வாரியாக குறை நீர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில், பொதுமக்கள் சேவைகள் உறுதி செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஜூலை மாதத்திற்கான முகாம் நடைபெற்று வருகிறது. ரேசன் கடைகளில் பொருட்களை நேரில் வந்து வாங்க இயலாதார்கள், மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படுகிறது. இம்முகாமில், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேசன் கார்டு வேண்டி மனுக்கள் பதிவு செய்தல் உள்ளிட்ட சேவைகள் நடத்தப்படுகிறது.