கூகுளின் புதிய அறிமுகம்!

Filed under: உலகம் |

அவ்வப்போது கூகுள் நிறுவனம் புதிய செயலிகளை அறிமுகம் செய்துவருகிறது. இந்த வகையில் தற்போது புதிதாக ஒரு செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதனால் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

ஸ்விட்ச் டு ஆண்ட்ராய்ட் என்ற புதிய செயலியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டு போனுக்கு டேட்டாக்களை எளிதில் மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கு முன் ஐபோனில் உள்ள டேட்டாக்களை ஆண்ட்ராய்டு போனில் மாற்றுவதற்கு வசதி மிகவும் குறைவாக இருந்த நிலையில் தற்போது கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு போனுக்கு ஐபோனில் இருந்து டேட்டாக்களை எளிதில் மாற்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் ஆண்ட்ராய்டு போன் பயனாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.