கூடுதல் மெட்ரோ ரயில் தடம் : அமைச்சர் தகவல்

Filed under: சென்னை |

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்படும் என கூறியுள்ளார்.

 

சென்னை மாநகரில் ஏற்கனவே இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகிறது. இதில் லட்சக்கணக்கான பயணிகள் இந்த மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் கூடுதலாக மேலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் அமைக்கப்படும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார்.

முதல்கட்டமாக சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை பூந்தமல்லியிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை நீடிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அதேபோல் கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் வழியாக கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் இயக்க ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் உறுதி செய்யப்பட்டால் அந்த பகுதி மக்களுக்கு மிகப்பெரிய பயன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.