கேஜிஎப் பட நடிகர் கார் விபத்து!

Filed under: சினிமா |

கேஜிஎப் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் ஓட்டிச்சென்ற கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றிய விபரங்களை அவரே பதிவிட்டுள்ளார்.

கேஜிஎப் இரண்டு பாகங்களில் சிறு வேடங்களில் நடித்தவர்கள் கூட இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளனர். இரண்டு பாகங்களிலும் மிரட்டல் வில்லனாக தோன்றி கலக்கியவர் அவினாஷ். நேற்று சமூகவலைதளத்தில் அவர் ஒரு மோசமான விபத்தில் சிக்கியதாக தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் பெங்களூருவில் காரில் சென்று கொண்டிருந்த போது லாரி ஒன்று மோதி காரின் முன்பக்கம் மிகவும் சேதம் அடைந்ததாககவும் ஆனால் அதிர்ஷ்டவசமாக தனக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.