கேரள உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

Filed under: இந்தியா |

கேரள உயர்நீதிமன்றம் சிபிஎம் எம்.எல்.ஏ. வெற்றி செல்லாது என்று அதிரடியாக செல்லாது என்று தீர்ப்பை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் கேரள மாநிலம் தேவிகுளம் என்ற சட்டமன்ற தொகுதியில் சிபிஎம் கட்சியின் வேட்பாளராக ராஜா என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சிபிஎம் எம்எல்ஏ ராஜா வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பட்டியல் இனத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ராஜா தனி தொகுதியான தேவி குளத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என்ற அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமார் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் சற்று முன் தீர்ப்பு வெளியானது. இத்தீர்ப்பில் கேரளா எம்எல்ஏ ராஜா வெற்றி செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது.