கேள்விக்குறியாகும் இந்திய பொருளாதாரம்!

Filed under: அரசியல்,இந்தியா |

15TH_CITY_PARLIAME_1144100fஉத்திரபிரதேசம் மதசார்பற்ற தன்மைக்கும், மதநம்பிக்கைக்கும் உடைய போட்டியை மக்களைக் கொன்று நிரூபித்துக் கொண்டு உள்ளதாம். சாதி மத வேறுபாடுகளை கடந்து அமைதியான முறையில் ஆட்சி நடத்தவேண்டிய மாநில அரசும், எதிர்கட்சிகளும் தன் சொந்த மக்களை மதங்களின் பெயரால் உசுப்பி தீவிரவாதத்தன்மையை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
உலகம் எங்கும் இறைவன் கட்டளைப்படி சாதாரண மக்களை கொன்று குவிக்கும் சம்பவம் நடந்து கொண்டு உள்ளது. அமைதி பூங்காவாக செயல்படும் தமிழகத்தைக்கண்டு உலக மக்கள் வியக்கிறார்கள். இங்கு இறைவன் ஆணைக்கு கட்டுப்பட்டு நாத்திகமும், தீவிரவாதமும் அடங்கி போயுள்ளதாகக்குறிப்பிடுகிறார்கள்.
ஜெயலலிதாவுக்கு எதிராக மக்கள் மன்றத்தை அமைத்து உசுப்பேத்த நினைத்த நாத்திகவாதிகள் தங்கள் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு அடங்கி நடக்கிறார்களாம். தமிழக மக்களின் மதநம்பிக்கைகள் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை அதிபரை தமிழக அறிவாளிகள் கொண்ட பா.ஜ.க. குழு சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தார்களாம். வஞ்சக நரியான இலங்கை அதிபர் இந்திய கடல் எல்லையில் இலங்கை கடற்படை ஆராய்ச்சி நிலையம் அமைக்க தூபம்போட்டு உள்ளார். தமிழனை அடிமையாக்க துணிந்த, தமிழக அறிவாளிகள்இதை பிரதமருக்கு சிபாரிசு செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தமிழ்குலம் அழிக்க வீறு கொண்டு எழுந்து புறப்பட்ட தமிழ் விரோத சக்திகள் ஜெயலலிதாவின் கண் அசைவில் தவிடு பொடியாகி விட்டதாக தலைநகர அதிகார வட்டாரம் கூறுகிறது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, ராகுல்காந்தி தற்போது தனிமைப்பட்டு நிற்கிறார்கள். இந்திய உணர்வுகளை அறிந்து கொள்ளாமல், இந்தியர்கள் எதிர்காலத்தை உலக நாடுகளுக்கு அடிமையாக்க நினைத்த துரோகிகளுக்கு ஊக்கம் அளித்து தற்போது அரசியல் அநாதைகளாக நிற்பதாக கருத்து உலவுகிறது.
44 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு பா.ஜ.க.வை நோக்கி வீடுகட்ட நினைத்த காங்கிரசுக்கு, சபாநாயகர் முறையான ஆப்பு அடிப்பதாக கூறுகிறார்கள். ராகுல்காந்தி அவரது அடிவருடிகளால் தடுமாறி தனித்து நிற்பதாக கூறப்படுகிறது. சுமார் 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கால காங்கிரஸ் நடவடிக்கைகளை எதிர்நோக்கி காத்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கூட்டணிகள் தனியாக பிரிந்து சென்று தனிமரம் ஆக்கிவிட்டதாக கூறுகிறார்கள்.
கர்நாடக முதல்வர் மாற்றப்பட்டு கார்கே முதல்வர் ஆகக்கூடும். கமல்நாத் பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ஆகிறார் என்கிறார்கள். மராட்டிய முதல்வர் பதவிக்கு சுசில்குமார் ஷிண்டே நியமிக்கப்படப்போவதாக கூறப்படுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர்கள், தற்போது காங்கிரஸ் தலைமையின் கோரப்பார்வைக்கு பயந்து நிலைதடுமாறி நிற்கிறார்கள். வாசனின் கை ஓங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி தற்போது இந்திய மக்களுக்கு நேரடி நிர்வாக வசதிகளை அளிக்க முயற்சி செய்துள்ளார். இந்திய நிர்வாகம் கிராமங்களிலிருந்து தொடங்குகிறது. கிராமங்களில் மேற்பார்வை குழு அமைக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடுகள் செலவழிப்பதை கண்காணிக்க வசதி செய்துதரப்படவேண்டியது அவசியம். கிராமக் குழுக்களின் பரிந்துரைகள் நகரத்திற்கு சென்று, இணைந்த பரிந்துரைகள் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியாளர் மத்திய மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு செலவினங்களுக்கு, பொறுப்பேற்று நடத்தவேண்டியது அவசியம் என்கிறார்கள். மக்கள் குழுக்களுக்கு அங்கீகாரம் அளிக்காமல் தன்னிச்சையாக அதிகாரிகள் செயல்படும் முறை இந்திய பொருளாதாரத்திற்கு நன்மையை தராமல் போகலாம் என்ற கருத்து உலவுகிறது. அரசியல்வாதிகளின் குறுக்கீடுகள் இந்தியாவை அடிமை ஆக்கும் நோக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.