இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 74.30 சதவீதமாக உயர்வு!

Filed under: இந்தியா |

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது இந்த வைரஸால் இதுவரை 29, 75, 702பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 55,794 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 22,22, 588 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதன் விகிதம் 74.30 சதவீதமாக ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 6, 97,330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 63, 631 குணமடைந்துள்ளனர்.

இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சத்து 23 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. இதனால் இதன் மொத்த எண்ணிக்கை 3, 44, 96,073 அதிகரித்துள்ளது.