கொரோனாவால் பலியான தலைமை செவிலியர் – ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அதிர்ச்சி!

Filed under: அரசியல்,தமிழகம் |

கொரோனாவால் பலியான தலைமை செவிலியர் – ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அதிர்ச்சி!

சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் பணியாற்றி வந்த தலைமை செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

சென்னை நங்கநல்லூரில் வசித்து வரும்  ஜோன் மேரி பிரிசில்லா ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் தலைமை செவிலியராக பணியாற்றி வந்தார். அவருக்கு கொரோனா வார்டில் பணி இல்லை. செவிலியர்களுக்கு பணிநேரம் ஒதுக்குதல் போன்ற வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இரு தினங்களுக்கு முன்னர் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் நேற்று இரவு 11 மணி அளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த செய்தியானது ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த செவிலியர் பிரிசில்லாவுக்கு சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.