கொரோனாவில் இருந்து தப்பிக்க மூடநம்பிக்கை சடங்கு – நாக்கை இழந்த சிறுமி!

Filed under: அரசியல்,இந்தியா |

கொரோனாவில் இருந்து தப்பிக்க மூடநம்பிக்கை சடங்கு – நாக்கை இழந்த சிறுமி!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்க என்று சொல்லி சிறுமி ஒருவரின் நாக்கைத் துண்டித்து காணிக்கையாக்கியுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புண்டேல்கண்ட் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் கொரோனா பாதிப்பை போக்குவதற்காக கொடூரமான மூட நம்பிக்கை ஒன்றை செயல்படுத்தியுள்ளனர். அங்குள்ள சிவ்ஜி கோயிலில் அதே பகுதியைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரின் நாக்கை வெட்டி அதை அங்குள்ள சிவ்ஜி கோயிலுக்குக் காணிக்கையாகக் கொடுத்துள்ளனர்.

இந்த கொடூரத்தை அங்குள்ள உயர்சாதி மக்கள் முன்னின்று நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான செய்திகள் மற்றும் சிறுமியின் புகைப்படம் வெளியாகி சமூகவலைதளங்களில் கண்டனங்களைப் பெற்று வருகிறது. மேலும் சம்மந்தப்பட்டவர்கள் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.