கொரோனாவை பொருட்படுத்தாத கேரள மக்கள்!

Filed under: இந்தியா |

நள்ளிரவில் அறிவிக்கப்பட்ட ஆபரால் மக்கள் கொரோனாவை பொருட்படுத்தாது கூட்டம் கூடியுள்ளனர்.

கேரள மாநிலத்திலுள்ள லுலு மாலில் நள்ளிரவு ஆபர் அறிவிக்கப்பட்டதால் மக்கள் குவிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா முழுதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவிலும் பாதிப்புகள் வேகமாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மக்கள் மாஸ்க் அணிவது உட்பட பல்வேறு கொரோனா விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வருகிறது. நேற்று கேரளாவில் பிரபலமான லுலு ஷாப்பிங் மாலில் நள்ளிரவு ஆபர் அறிவிக்கப்பட்டது. இதனால் ஆபரில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் லுலு மால் நோக்கி படையெடுத்தது. மாலுக்குள் நிற்கவே இடமில்லாத அளவு மக்கள் கூட்டம் குவிந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. கேரளாவில் கொரோனா தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் மக்கள் பலர் கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டமாக குவிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.