கோட்டைவிட்டால் தண்டனை அதிர்ச்சியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்!

Filed under: அரசியல்,இந்தியா |

DSC_0119நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் இந்திய வாக்காளர்களை குழப்பி உள்ளது. இந்திய கட்சிகள் இந்திய மக்களின் விழிப்புணர்ச்சியைக் கண்டு மிரண்டுபோய் உள்ளன. மாநிலக்கட்சிகள் மாநில உணர்வுகளை தட்டிக்கேட்கும் மக்களுக்கு பதில் சொல்லத்தெரியாமல் திகைத்துப்போய் உள்ளார்கள். மதங்களின் போர்வையில் பிரிவினை ஏற்படுத்திய தேசிய கட்சிகள் மக்களின் மதசார்பற்ற இந்திய ஒருமைப்பாட்டைக்கண்டு அலறுகின்றன.
இந்திய வாக்காளர்கள் 4 வகையாக பிரிந்துள்ளனர். செல்வாக்கு படைத்தவர்கள், நடுத்தர மக்கள், ஏழை எளியவர்கள் மற்றும் இளைய தலைமுறை. இதில் இளைய தலைமுறை பல்வேறாக பிரிந்துள்ளது. வேலை இல்லா திண்டாட்டத்தில் இருக்கும் இளையதலைமுறை மாநில கட்சிகளை நம்பி உள்ளது. படித்த அறிவாளிகள் மற்றும் நல்ல வருமானத்தில் உள்ள இளையதலைமுறை பா.ஜ.க.வை விரும்புகிறது. இந்திய உணர்வு உள்ள ஓரளவு படித்த இளைய தலைமுறையினர் காங்கிரசை நம்புகிறார்கள். செல்வாக்கு படைத்தவர்கள் ஆட்சி ஏறும் கட்சிக்கு ஆதரவு அளிப்பார்கள். நடுத்தர மக்கள் வேறுவழியின்றி கடைசி நாளான ஓட்டுபோடும் போது அரசியல்வாதிகளின் பேச்சில் மயங்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாம்.
தற்போதைய இளைஞர் சமுதாயத்திற்கு இந்திய பாதுகாப்பு, ஒருமைப்பாடு போன்ற சிந்தனையில் அதிக நாட்டம் கொள்வதில்லை என்ற கருத்து உள்ளது. மேலும் வேலையில்லா திண்டாட்டத்தை போக்கக்கூடிய வழிமுறைகளை தேசிய கட்சிகள் குறிப்பிடவில்லை என்ற அரசியல் கணிப்பு உள்ளது.
நிர்வாகத்திறமை இல்லாத காரணத்தால் காங்கிரசு தன் செல்வாக்கை இழந்துள்ளது. ஆனால் காங்கிரசின் பணபலம் பாதாளம் வரைக்கும் செல்லும் சக்தி படைத்தது என்கிறார்கள். நரேந்திரமோடியை காட்டி பா.ஜ.க. ஆதரவை தேடினாலும் எங்கு நோக்கினும் குஜராத் அரசியல்வாதிகளின் தலையீடு வடமாநில பா.ஜ.க. தலைவர்களை குழப்பி உள்ளதாக குறிப்பிடுகிறார்கள். மாநில அரசியல்வாதிகளை நம்பாமல் குஜராத் அரசியல்வாதிகளை மோடி அனுப்புவதால் மாநிலங்களில் பா.ஜ.க. ஆதரவு குறையும் நிலை ஏற்படும் என்று குறிப்பிடுகிறார்கள். பா.ஜ.க. அகில இந்திய அளவில் உயர்ந்து தோற்றம் அளித்தாலும் ஓட்டுபோடும் தினத்தன்று அதன் கவர்ச்சி குறையலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியலில் நிலவுகிறது. சாதிகளையும், மதங்களையும் பிரித்து வெற்றிபெற்ற அரசியல்வாதிகள் அதே சாதிகளும் மதங்களும் ஒன்றிணைந்து ரிவிட் அடிக்கத் தொடங்கி விட்டன என்கிறார்கள்.
உத்திரபிரதேசத்தில் மாயாவதியின் கை தற்போது ஓங்கி உள்ளதாம். அவர் போடும் புத்திசாலித்தனமான அரசியல் கணக்குகள், அரசியல்வாதிகளை கலக்கி உள்ளது. தமிழக பச்சை தமிழச்சியின் அரசியல் பயணம் உலக அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை தேர்தலில் எதிரும் புதிருமாக கருத்து பரிமாறிய கட்சிகள், தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக தற்போது ஒன்றிணைந்து தமிழக மக்களை முட்டாளாக்க திட்டமிட்டு இருப்பது தமிழ் மக்களிடையே வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. விஜயகாந்தை மடக்கத்தெரியாத தமிழக காங்கிரசின் புத்திசாலித்தனத்தை டெல்லி காங்கிரஸ் கிண்டலடிக்கிறதாம். ஊழல் குற்றச்சாட்டுகளை பற்றி ஓங்கி குரல்கொடுத்த காங்கிரஸ் தி.மு.க.வுடன் உறவு கொள்ள துடித்ததை தமிழக மக்கள் ரசித்தார்களாம். பச்சை தமிழச்சிக்கு எதிரியாக அதாவது சேம்சைடு கோல் போடுபவர்களாக கறைபடிந்த அ.தி.மு.க. கட்சி தலைவர்களை குறிப்பிட்டு பேசுகிறார்களாம். பச்சை தமிழச்சி நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி பெற்ற வெற்றியை தங்கள் உயர்வுக்கும் தங்களை சார்ந்த சாதிகளை உயர்த்தும் வழிமுறை கண்டறிந்து உள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அ.தி.மு.க. தோற்கும் பாராளுமன்ற தொகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இழக்கக்கூடிய நிலை ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாக தமிழக அ.தி.மு.க. கூறுகிறதாம்.
அ.தி.மு.க.விற்கு ஆதரவாக தமிழக மக்கள் ஒன்றிணைந்து நிற்கும்போது அதை சரிவர பயன்படுத்தத்தெரியாத அ.தி.மு.க. தலைவர்கள் அரசியல் வாழ்க்கைக்கே பயனற்றவர்கள் என் அ.தி.மு.க. தொண்டர்கள் தமிழகம் எங்கும் குரல் எழுப்புகிறார்களாம். தமிழக முதல்வரின் எழுச்சி உலக சரித்திரத்தில் தமிழனின் உயர்வை வரலாறு காணாத வகையில் உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு உலகத்தமிழர்களிடையே பரவி உள்ளது.