கௌதம் மேனனின் பெருந்தன்மை!

Filed under: சினிமா |

சமீபத்தில் கவுதம் மேனன் ஒரு டௌண்ட் டேபிள் நிகழ்ச்சியில் தன்னை லவ் டுடே திரைப்படத்தில் கேலி செய்ததைப் பற்றி பேசியுள்ளார்.

“லவ் டுடே” திரைப்படம் இவ்வாண்டில் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு அதிக மடங்கு லாபத்தைப் பெற்றுத்தந்தது. 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் 70 கோடி ரூபாய் வரை திரையரங்குகள் மூலமாக வசூல் செய்தது. இதனால் படத்தின் நாயகன் பிரதீப் மற்றும் நாயகி இவானா ஆகியோருக்கு மிகப்பெரிய அளவில் கவனம் கிடைத்துள்ளது. இத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் இயக்குனர் கவுதம் மேனனை கேலி செய்வது போல ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் கவுதம் மேனன் “லவ் டுடே படத்தில் என்னைக் கலாய்த்து ஓட்டி இருந்தார்கள். என்னை அழைத்து இருந்தால் நானே அந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பேன்” என பெருந்தன்மையாக பேசியுள்ளார்.