சம்பளத்தை குறைத்த முன்னணி நடிகர்!

Filed under: சினிமா |

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த முன்னணி நடிகர் தொடர்ந்து அவரது படங்கள் தோல்வியடைந்ததால் தனது சம்பளத்தை பாதியாக குறைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியில் சூப்பர் ஸ்டாராக பல படங்களில் நடித்தவர் அக்ஷய் குமார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி, வசூலை குவித்தன. இதனால் இவரது கிராப் எகிறியதுடன் சம்பளமும் அதிகரித்தது. மூன்று கான் நடிகர்களுக்கு இணையாகச் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த அக்ஷய்குமாரின் கடைசி ஹிட் படம் “லட்சுமி பாம்.” இப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கியிருந்தார். இப்படத்தை அடுத்து, சாம்ராட் பிரித்விராஜ் பெல்பாட்டம், பச்சன் பாண்டே உள்ளிட்ட 3 படங்கள் படுதோல்வியடைந்தன. இதுவரை நடித்த படங்களுக்கு அக்ஷய்குமார் ரூ.130 முதல் ரூ.150 கோடி வரை சம்பளம் பெற்று வந்தார். இவர் அடுத்து நடிக்கவுல்ல சோஹ்டே மியான் படத்திற்கு ரூ. 150 கோடி சம்பளம் ஒப்பந்தம் செய்த நிலையில், 3 படங்களின் தொடர் தோல்வியால் அக்ஷய்குமாரின் சம்பளம் 50% குறைந்துள்ளது, தற்போது ரூ.75 கோடி சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது. இவர் 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.