சினிமாவிலிருந்து விலகும் காஜல்?

Filed under: சினிமா |

பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்துள்ள அவர் அங்கும் முதன்மை கதாநாயகியாக வலம் வருகிறார்.

லாக்டவுனின் போது அவர் தொழிலதிபர் கௌதம் கிட்சுலுவை திருமணம் செய்துகொண்டார். அதையடுத்து கர்ப்பமான அவர், அதை ரசிகர்களுக்கு அறிவித்து, கர்ப்பகால புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். அதையடுத்து சமீபத்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு நீல் கிட்சுலு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால் “இந்தியன் 2” மற்றும் பாலய்யாவின் “பகவத் கேசரி” ஆகிய இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த படங்களை முடித்ததும் அவர் சினிமாவை விட்டு முழுமையாக விலகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தன் குழந்தையோடு அதிக நேரத்தை செலவிடுவதற்காக அவர் இம்முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.