சிறுமியை கடத்திய இளைஞர் கைது!

Filed under: தமிழகம் |

8ம் வகுப்பு படிக்கும் சிறுமியை 20 வயதுடைய இளைஞர் கடத்தி சென்றுள்ளார். இச்சம்பவம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் 13 வயதுடைய சிறுமியை காதலிப்பதாக கூறியும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை காட்டி உள்ளார் 20 வயதுடைய இளைஞர் ஒருவர். அச்சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.