சிலைகள் கடத்த முயற்சி!

Filed under: தமிழகம் |

பல கோடி மதிப்புள்ள சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. அச்சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் மீட்டெடுத்துள்ளனர்.

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கும்பகோணத்தில் ஸ்ரீதர்ஷன் ஆர்ட் மெட்டல் என்ற கடையில் சிலைகள் தயாரிக்கப்பட்டு அச்சிலைகள் வெளிநாட்டிற்கு ஆவணமின்றி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
ஸ்ரீதர்ஷன் ஆர்ட் மெட்டல் கடையில் சிலை தடுப்பு அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக வைத்திருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள 6 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடை உரிமையாளர் ராமலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளதாக கடத்தல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சிலைகளின் கோடிக்கணக்கில் மதிப்பிருக்கலாம் என்றும், முதல்கட்ட விசாரணையில் இச்சிலைகள் தென்னாப்பிரிக்காவில் உள்ள நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.