சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம்!

Filed under: உலகம் |

சீனாவை “நீங்க பலூன் விட்டு விளையாட எங்க அணுசக்தி ஏவுதளம்தான் கிடைச்சுதா?” என்று அமெரிக்கா கேள்வியெழுப்பி உள்ளது. சீனாவின் உளவு பலூன் அமெரிக்காவின் ராணுவ பாதுகாப்பு பகுதிக்குள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மொண்டானா பகுதியில் ராணுவ பாதுகாப்புடன் கூடிய அணுசக்தி ஏவுதளம் ஒன்று அமைந்துள்ளது. சமீபத்தில் பாதுகாக்கப்பட்ட ஏவுதளம் பகுதியில் வானில் பறக்கும் பலூன் ஒன்று தென்பட்டது. அதை சுட்டு வீழ்த்தலாம் என நினைத்த ராணுவம் அதனால் ஏவுதளம் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என நினைத்ததால் அந்த முயற்சியை கைவிட்டது. மேலும் அந்த பறக்கும் பலூனை கண்காணித்ததில் அது சீனாவின் உளவு பலூன் என தெரிய வந்துள்ளது. அந்த பலூனின் இயக்கத்தை தொடர்ந்து அமெரிக்கா கண்காணித்து வருகிறது. ஆனால் அது உளவு பலூன் இல்லை என சீனா மறுத்துள்ளது. வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்ட பலூன் காற்றினால் திசை மாறி அப்பகுதிக்கு வந்திருக்கலாம் என சீனா கூறியுள்ளது. சீனா அளித்த விளக்கம் குறித்து பதிலளித்துள்ள பெண்டகன் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பேட் ரைடர் கூறும்போது “சீன அரசின் விளக்கம் பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும். உண்மை என்னவென்றால் அது ஒரு உளவு பலூன் என்பது எங்களுக்கு தெரியும். சீனா அமெரிக்க வான்வெளி மற்றும் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது” என கூறியுள்ளார்.