டிக்டாக் உள்பட சீனா நாட்டின் சமூக வலைத்தள செயலிகளை தடை செய்வதற்கு அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 15ஆம் தேதி லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையான மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து மத்திய அரசு டிக் டாக், ஷேர் சாட் உள்பட 59 சீனா நாட்டின் செயலிகளை கடந்த வாரம் தடை செய்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு இல்லை என்பதால் இந்த செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. டிக் டாக் செயலிகள் மீது முதலீடு செய்த நிறுவனங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு சீனா எதிர்ப்பு கண்டனம் தெரிவித்தது.
தற்போது அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியது: டிக்டாக் உள்பட சீனா நாட்டின் சமூக வலைத்தள செயலிகளை தடைசெய்வது பற்றி பரிசீலனை செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளார். கொரோனா பிரச்சனைக்கு சீனாவுக்கு கடும் கண்டனத்தை அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்து என்பது குறிப்பிடத்தக்கது.